தொடங்கியது திமுக-வின் அராஜகம்! அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுக!

Photo of author

By Rupa

தொடங்கியது திமுக-வின் அராஜகம்! அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுக!

தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடை பெற்றது.தேர்த்தலின் முடிவுகளை எண்ணி மக்கள் அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர்.அந்தவகையில் தேர்தலின் முடிவுகளானது மே 2-ம் தேதி வெளியானது.அதில் திமுக 159 இடங்களில் தனிப்பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.அதனைத்தொடர்ந்து அதிமுக 75 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில் திமுக ஆட்சி அமைத்தால் பல அராஜகங்கள் நடக்க கூடும் என பெரும்பாலாக பேசி கொண்டிருந்தனர்.அதனை உறுதிபடுத்தும் விதமாக ஆட்சிக்கு வந்து விடியலை தரும் முன்னே திமுக-வின் அடாவடி தனம் தொடங்கிவிட்டது.அந்தவகையில் இன்று சென்னையிலுள்ள ஜெ.ஜெ நகரில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் ஜெ.ஜெயலலிதாவின் புகைப்படம் உள்ளது.அம்மாவின் புகைப்படத்தை அகற்றி விட்டு திமுக தலைவர் ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி திமுக தொண்டர்கள் அராஜகம் செய்துள்ளனர்.

மேலும் அங்குள்ள அம்மாவின் படத்தை உடைத்தும்,கூச்சலிட்டும் அங்கிருந்த ஊழியர்களை கட்டையால் தாக்கியும் அராஜகம் செய்துள்ளனர்.அங்குள்ள அக்கம் பக்கத்தினர் அவர்கள் செய்த அராஜகத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.தற்போது இந்த வீடியோ பதிவானது தமிழகம் முழுவதும் வைரலாகி பரவி வருகிறது.விடியலை தருவார் என நம்பிய மக்களுக்கு இது பெருமளவு ஏமாற்றமாக இருக்க கூடும்.10 வருடங்கள் ஆட்சி அமைக்காத விரகத்தியில் இருந்த கொலை வெறி தாக்குதல் போல உள்ளது.தொடக்கத்திலேயே இப்படி அராஜகத்தை தொடங்கினால் இன்னும் 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் எத்தனை துன்பத்தை காணப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.