டாஸ்மாக்கில் அதிமுகவினரின் அராஜகம்! ஓசி சரக்கால் நடந்த விபரீதம்!

Photo of author

By Rupa

டாஸ்மாக்கில் அதிமுகவினரின் அராஜகம்! ஓசி சரக்கால் நடந்த விபரீதம்!

டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களின் அராஜக வேலைகள் நடந்துக்கொண்டே தான் உள்ளது.இந்நிலையில் கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் பார் வசதியுடன் கூடிய டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.நேற்று முன்தினம் இரவு அந்த டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தவர்கள் மது கடை ஊழியரிடம் சரக்கு கேட்டுள்ளனர்,

மதுக்கடை ஊழியர் காசு கொடுங்கள் என அவர்களிடம் கேட்டுள்ளார்.அதற்கு அவர்கள் நாங்கள் யார் என்று தெரியுமா? என்கிட்டேயே பண கேட்குறியா? எங்களை பகைச்சுகிட்டு பார் நடத்த முடியுமா? என சினிமா பட வில்லன் போல் பார் ஊழியரிடம் நடந்து கொண்டுள்ளனர்.அதன் பின் அங்குள்ள ஊழியரின் தலையை கட்டையாலும் பாட்டிளாலும் ரத்தம் வர அடித்துள்ளார்.பிறகு அங்குள்ள பொருட்களை உடைத்தும் அராஜகம் செய்துள்ளனர்.

அவர்கள் அடித்ததில் பலத்த காயமடைந்த பார் ஊழியர் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் மூன்று பேர்களுக்கு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.அதில் ஒருவரின் நிலை மட்டும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.மலுமிச்சம்பட்டி டாஸ்மார்க் பாரில் சினிமா பட பாணியில் வில்லன் போல் நடந்து கொண்டவர் அதிமுக ஐடி விங் துணை செயலாளர் சம்பத்குமார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ஓசி சரக்குகாக இவ்வாறு அராஜகம் செய்யும் அதிமுகவினரின் இந்த செயலைக்கண்டு கோவை பொதுமக்கள் மிகுந்த கோவத்தில் உள்ளனர்.இதனையடுத்து அதிமுக துணை செயலாளர் சம்பத்குமார் பார் ஊழியர்களை தாக்கியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.