முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்டால் இந்த சலுகை வழங்கப்படும்!
நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது உடலால் மற்றும் குறைபாட்டை தன்னம்பிக்கையால் வெல்லக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாற்றுத்திறனாளி என பெயரை சூட்டியவர் தலைவர் கருணாநிதி தான்.
அதனால் அவரை பெயர் சூட்டிய தந்தை என அழைக்கப்படுகின்றார்.திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வகையிலான கருவிகள் 36 மாதிரிகளில் 7219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.மேலும் நகர பேருந்துக்களில் மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். 1096 பின்னடைவு காலிப்பணியிடங்ககள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்திட்டத்தின் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியையும் பரிசுத்தொகையாக பாதித்தொகை ரொக்கமாகவும் ,மீதமுள்ள தொகையை தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்பட்டு வருகின்றது.ஆனால் தற்போது அதனை மாற்றி முழுத்தொகையும் ரொக்கமாக வழங்கப்படும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் அல்லாதவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.அந்த கோரிக்கை குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.