மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த திட்டம் செயல்படாது!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வந்தது அப்போது மக்களுக்கு தேவையான அரிசி ,கோதுமை ,ஆகியவை பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கி வந்தது. இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ 1.5 லட்ச கோடி செலவிடப்பட்டு வந்தது.
ஒரு நபருக்கு ஐந்து கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி வரை மட்டுமே இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் அதற்கு பிறகு இந்த திட்டம் நிறுத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த திட்டம்மானது கடந்த உத்திரபிரதேச தேர்தலில் பாஜக வெற்றிக்கு பெரும் அளவில் உதவியது.இந்நிலையில் அடுத்த சில மாதங்களுக்குள் குஜராத் ,இமாச்சல பிரேதச மாநிலங்களில் சட்ட பேரவை தேர்தல் நடக்கவுள்ளது.இதனையடுத்து கர்நாடக ,தெலங்கானா போன்ற பகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது அதனால் அந்த பகுதிகளில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீட்டிக்கப்படுமா அல்லது நிறுத்தப்படுமா என இன்னும் ஒருசில தினங்களுக்குள் தெரிந்து விடும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.