பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்களுக்கான இந்த மாத சம்பளத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!

0
208
The announcement made by the school education department! Shock waiting for this month's salary for teachers!
The announcement made by the school education department! Shock waiting for this month's salary for teachers!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்களுக்கான இந்த மாத சம்பளத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்ச்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மாதம் தோறும் 20ஆம் தேதி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும்.அதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கையெழுத்திட்ட பின்பு கருவூலத்திற்கு அனுப்பி அவைக்கப்படும்.

மேலும் ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும்.இந்நிலையில் பள்ளி கல்வித்துறை நிர்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் முன்னதாக இருந்த மாவட்ட கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை 120ல் இருந்து 152ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் பல மாவட்ட கல்வி அலுவலர்கள் இன்றும் முழுமையாக பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது.அதனால் சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் இதுவரை பெறப்படவில்லை.

மேலும் இதனால் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.இதனையடுத்து பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  அல்லாத ஊழியர்கள் புதிய  இடங்களில் சேர்ந்து வருகின்றனர்.

அவர்களுக்கான நிதி பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததால் இந்த மாதத்திற்கான ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Previous articleதிருமாவளவனை கதறவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!
Next articleநல்ல அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதாது! அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் தமிழக அரசை சாடும் பாஜக!