மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் இவை கட்டாயம்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் இவை கட்டாயம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவையானது நிறுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது நடப்பாண்டில் தான் கொரோனா தொற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.

முன்னதாக இருந்தது போல அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்பட்டது.ஆனால் தற்போது சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.மேலும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் உருமாறிய பிஎப் 7 என்ற வைரஸ் தான் காரணம் என தெரிவிக்கின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அதனால் ஜனவரி 1 ஆம் தேதி முதல் சீனா, ஹாங்காங்,ஜப்பான்,தென்கொரியா,சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நெகட்டிவ் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனசுக் மாண்டவியா அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.பயணம் செய்வதற்கு முன்பு பயணிகள் தாங்கள் பரிசோதனை செய்த அறிக்கையை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment