ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில்! இதை சொல்ல இவ்வளவு நாட்களா?
பெகாசஸ் என்பது இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு என்.எஸ்.ஓ நிறுவனம் உருவாக்கிய உளவு மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பதாக என்.எஸ்.ஓ நிறுவனம் உறுதி கூறியது. இந்த உளவு மென்பொருளை கொண்டு 40 க்கும் மேற்பட்ட நாடுகள் 50 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் 2016 ஆம் வருடத்திலிருந்து உளவு பார்ப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் அரசுகள் இத்தகைய குற்றச்சாட்டை கடுமையாக மறுத்து வருகின்றன.
குற்றவாளிகளையும் பயங்கரவாதிகளையும் உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே இந்த உளவு மென்பொருளை தாங்கள் விற்பது எனவும் கூறி இருக்கிறது. ஆனால் இது குறித்த சர்வதேச புலனாய்வு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், வெவ்வேறு நாடுகளின் எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், போன்றோர் இந்த மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டு இருக்கலாம் என்றும், சர்ச்சைகள் பல எழுந்தது.
அதே போல இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட சில அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய மந்திரிகள், பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரின் செல்போன்கள் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.
இந்த மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை ஒட்டி வைத்துக் கொண்டே இருந்தனர். ஆனாலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், பலவற்றை எதிர்க்கட்சிகளின் அமளியால் பேசமுடியவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தார் பிரதமர் மோடி. தற்போது பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி இந்த விளக்கத்தை அளித்துள்ளார். நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையின் காரணமாக மத்திய அரசு இன்று இந்த விளக்கத்தை அளித்துள்ளது.