நெருங்கும்மீன்பிடி தடைகாலம்; கிடுகிடுவென உயரும் மீன் விலை!

Photo of author

By Vijay

நெருங்கும்மீன்பிடி தடைகாலம்; கிடுகிடுவென உயரும் மீன் விலை!

ஒவ்வொரு ஆண்டும் கடலில் உள்ள மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடை காலம் விதிக்கப்படும்.இந்த நேரத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது. அந்த வகையில் இந்த ஆண்டு மீன்பிடி தடை காலம் வரும் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

கிட்டத்தட்ட 61 நாட்களுக்கு இந்த தடைகாலம் நடைமுறையில் இருக்கும்.  தடைகாலம் வர இன்னும் ஒரு வாரமே இருப்பதால், ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் தற்போது கரைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.இருப்பினும் விடுமுறை நாளான நேற்று குறைந்த அளவிலான படகுகளே கரை திரும்பியது.

எனவே மீன்கள் வரத்து குறைவு காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை அதிகரித்து காணப்பட்டது.அதன்படி கடந்த வாரம் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சரம் மீன் இந்த வாரம் கிலோ 1300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதுமட்டுமல்ல 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கொடுவா மீன் நேற்று 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இப்போதே இந்த நிலை என்றால், அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை இதைவிட இன்னும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், மீன்பிடி தடைகாலம் முடிந்து பழையபடி மீன்கள் வரத்து அதிகரிக்க தொடங்கினால் மட்டுமே மீன் விலை குறையும்.அதுவரை மீன் விலை உச்சத்தில் தான் இருக்கும் என்று சந்தை நிலவரம் கூறுகிறது.