சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அவசர தேவையாக 34 இடங்களில் ரெடிமேட் காங்கிரட் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட உள்ளனர். 700 இடங்கள் கண்டறியப்பட்டு வெள்ள நீரை வெளியேற்ற மின் மோட்டார்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்ற வருடம் பெய்த மழையின் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வந்தனர். இதனை அடுத்து இந்த வருடம் வெள்ளத்தை தவிர்க்கும் விதத்தில் முன்னுரிமை அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்கள் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 70% பணிகள் நிறைவடைந்துள்ளனர்.
இந்த நிலையில் 20ம் தேதிக்குள் இந்த பணிகள் எல்லாம் முடிவடைய வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. அதிகாரிகள் பணிகள் முடிந்த வடிகால்களில் தண்ணீர் விட்டு சரிபார்க்கப்பட்டது. சமீப காலமாக பெய்து வரும் மழையின் காரணமாக வடிகால்களில் நீர் தேங்காமல் விரைவாக வடிவதால் அதிகாரிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் பகுதியில் 33 அடி நீளம் அல்ல மழை நீர் வடிகாலை ப்ரீகாஸ்ட் என்ற ரெடிமேட் கான்கிரீட் பயன்படுத்தி மாநகராட்சி 36 மணி நேரத்தில் அமைத்தது. தற்சமயம் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளதால், அவசர காலத் தேவையாக மழைநீர் வடிகால்களில் இணைப்பு வழங்கும் விதத்தில் 34 இடங்களில் ரெடிமேட் கான்கிரீட் பயன்படுத்தி விரைந்து மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.
அதி கனமழை காரணமாக, வெள்ள பாதிப்பு உண்டாவதை தவிர்ப்பதற்காக சுரங்கப்பாதைகளில் தலா 2 மின் மோட்டார்கள், தாழ்வான இடங்கள், குடிசை வாழ் பகுதிகள் போன்ற இடங்களில் இன்று ஒட்டுமொத்தமாக 700 இடங்களில் ராட்சத மின்மோட்டார்கள் அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சாலை சீரமைப்பு பருவமழை காரணமாக, இந்த வருடத்தில் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையில் சாலைகள் புதுப்பித்தல் மற்றும் புதிதாக போடும் பணியை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளது. அதே சமயம் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படாத விதத்தில் சாலைகளில் பேட்ச் ஒர்க் என்ற ஒட்டு போடும் பணியை மாநகராட்சி ஆரம்பித்துள்ளது.
கீழ்ப்பாக்கம் தோட்ட சாலை போன்ற பல்வேறு சாலைகளில் மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் பேட்ச் ஒர்க் பணிகள் நேற்றைய தினம் நடைபெற்றனர். அதேபோல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளனர்.
வேளச்சேரி கால்வாய் ஆதம்பாக்கம் குளம் உள்ளிட்டவற்றில் இருக்கின்ற வண்டல்கள், ஆகாய தாமரைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு, கொடுங்கையூர் பெருங்குடி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் அதிகாரிகள் தெரிவித்ததாவது, பருவ மழையை எதிர்கொள்வதற்கான பணிகளை கவுன்சிலர்களுடன் ஒன்றிணைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் சுமார் 400 தாழ்வான இடங்களில் மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதனைத் தவிர்த்து மழை நீர் வடிகால் பணிகள் முடிவடையாத பகுதிகளில் அந்தந்த ஒப்பந்ததாரர்கள் மூலமாக மேன் மோட்டார்கள் அமைக்கப்படுகின்றன. இதைத் தவிர்த்து கூடுதலாக 300 மோட்டார்கள் மாநகராட்சியின் சார்பாக அமைக்கப்படும். சமூக நலக்கூடம், பள்ளிகள் உள்ளிட்டதை நிவாரண முகாம்களாக பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்,போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுடைய புகார்களை வழங்குவதற்கு 1913 என்ற எண்ணுடன் பிரத்தியேக கைபேசி எண்கள் விரைவில் வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே இருக்கின்ற மழைநீர் வடிகால் மற்றும் புதிய வடிகால்களின் முழு விவரங்கள் அந்த பகுதி மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இந்த இணையதள பயன்பாட்டை பயன்படுத்தி கால் வாய்கள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மின்வாரியம், பொதுப்பணித்துறை, காவல்துறை, குடிநீர் வாரியம், மாநகராட்சி, நெடுஞ்சாலை, வருவாய் போன்ற பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் விவரம், கைபேசி எண்கள் அடங்கிய கைபேசி செயலியை மாநகராட்சி துவங்கி உள்ளது.
இந்த கைபேசி செயலியின் மூலமாக குறிப்பிட்ட வார்டில் எந்த துறை பணியாளர்கள் அதிகாரிகளின் சேவை வேண்டுமோ, அவர்களை மற்ற துறை அதிகாரிகள் பணியாளர்கள் தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்து பணியாற்றும் விதத்தில் அலுவலக பயன்பாட்டிற்காக மட்டும் கைபேசி செயலியை மாநகராட்சி துவங்கி உள்ளது.