Breaking News

அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து ஆறு பெண் பிள்ளைகள் தப்பி ஓட்டம்!

அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து ஆறு பெண் பிள்ளைகள் தப்பி ஓட்டம்!

காஞ்சிபுரம் சாலபோகம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஆறு பெண் பிள்ளைகள் தப்பி ஓட்டம்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலபோகம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் இன்று காலை 16 வயது கொண்ட 6 பெண் பிள்ளைகள் தப்பி ஓடி உள்ளனர்.

அவர்களைத் தேடும் பணியில் காப்பக நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அரசு காப்பகத்திலிருந்து பெண் பிள்ளைகள் தப்பி ஓடிய இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.