இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடும் சட்டசபை! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 நிறைவேற்றப்படுமா?
தமிழக சட்டசபையின் நடைபாண்டின் முதல் கூட்டம் கடந்து ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதனை அடுத்து சில நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் 2023 24 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது.
இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுவார். இரண்டு மணி நேர உரை. அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாகவே காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த முறையும் அவ்வாறே தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்குவார் உறுப்பினர்களும் தாங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ள மடிக்கணினியில் பட்ஜெட் உரையை பார்த்து தெரிந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சபாநாயகர் முஅப்பாவு தலைமையில் அலுவலர் ஆய்வு குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று குறித்தும் விவாதித்து முடிவு செய்யப்படும்.
அதே கூட்டத்தில் துறைவாரியாக மானிய கோரிக்கை விவாதத்தையும் எப்போது எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த நாள் தெலுங்கு வருடப்பிறப்பு என்றால் அரசு விடுமுறை நாளாகும் எனவே சட்டசபைக்கும் விடுமுறை. தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும் நிதி மற்றும் வேளாண் துறை அமைச்சர்களின் பதிலுரையும் 23, 24, 27, 28 ஆகிய தேதிகளில் நான்கு நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே 2023-24 ஆம் நிதியாண்டுக்கான முன்பணம் மானிய கோரிக்கையையும் 2022-23 நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவினம் ஆணைய கோரிக்கையும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் 28ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனால் அன்றைய தினம் அது இடம் பெறும்.மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெண்களுக்கு உரிமை தொகையாக மாதம் வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும் என்று அறிவித்திருந்தார். அதனால் இந்த பட்ஜெட்டை பெண்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு பயனாளிகளுக்கான வரைமுறை என்ன என்பது பட்ஜெட் அறிவிப்பில் தான் வெளியாகும்.
பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீது சில கேள்விகளை எழுப்பி கவர்னர் ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார். ஆனால் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ள.இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இந்த கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும். இது தவிர வேறு பல சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.