கதறிய மூதாட்டி! திருட வந்த நபர் செய்த கொடூரம்!

Photo of author

By Hasini

கதறிய மூதாட்டி! திருட வந்த நபர் செய்த கொடூரம்!

பெண் என்பவள் சிறு வயது என்றாலும், படு கிழவி என்றாலும் காமவெறி பிடித்த காமுகர்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை.சட்டங்கள் கடுமையானால் ஒழிய இவர்களை ஒழிக்க வழியே இல்லை.

அப்படி ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில், அப்பிக்கானிப்பள்ளி என்ற இடத்தில் 60 வயதுடைய ஒரு பாட்டி தனியாக வாழ்ந்து வந்தார்.அதே பகுதியில் மூர்த்தி என்பவரும், சமீபத்தில் குடியேறி உள்ளார்.

மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டம் பார்த்த மூர்த்தி, அவரின் வீட்டில் உள்ள 4 சவரன் நகைகளை திருடி உள்ளான்.அதன் பின் அந்த பாட்டியை கடுமையாக தாக்கி, பாலியல் வன்புணர்வும் செய்துள்ளான்.

அதன்பின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.அதன் காரணமாக பாட்டி அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பாட்டியை மீட்டு புங்கனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவத்தினால் கொதித்த அப்பகுதி மக்கள், மூர்த்தி தன் வீட்டில் பதுங்கி இருப்பதை உறுதி செய்து அவனை மடக்கி பிடித்து, அடித்து உதைத்து கொன்றே விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.கிராம மக்களிடமும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.