காதலை கைவிட்டதன் காரணமாக இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்! அத்தை மகனின் வெறித்தனம்!

Photo of author

By Hasini

காதலை கைவிட்டதன் காரணமாக இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்! அத்தை மகனின் வெறித்தனம்!

கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டத்தில் உக்கேரி தாலுகா படா கிராமத்தைச் சேர்ந்தவர் வந்தனா. 30 வயதான இவர் தன்னுடைய அத்தை மகன் இரண்டு வயது சிறியவன் என்றாலும் அவரை காதலித்து வந்துள்ளார். அவன் பெயர் பிரவீன் என்ற 28 வயதான நபர். இவர்கள் இருவரும் காதலித்ததை தொடர்ந்து கணவன் மனைவி போல திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பிரவீனின் நடவடிக்கைகள் சிலது வந்தனாவுக்கு பிடிக்காமல் போய் இருக்கின்றன. எனவே அவருடன் இருந்து விலகியதாக தெரிகிறது. மேலும் பிரவீன் உடனான காதலையும் வந்தனா கைவிட்டுவிட்டார். அதனை தொடர்ந்து அவர் இன்னொரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் கூறினார்கள். இது பற்றி அறிந்த பிரவீன் வந்தனாவிடம் அந்த காதலை கைவிடும்படி கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்நிலையில் வந்தனா கே.எம்.ஆலூர் என்ற இடத்திலிருந்து படா கிராமத்திற்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இடத்திலிருந்து அந்த பஸ்ஸில் ஏறிய அத்தை மகனான பிரவீன், வந்தனாவின் அருகில் அமர்ந்தார். பின்னர் அவருடன் பேசிக்கொண்டு  வந்த பிரவீன் அந்த காதலை கைவிட்டுவிட்டு  மீண்டும் தன்னை காதலிக்க வேண்டும் என்று வந்தனாவிடம் வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் வந்தனா இதற்கு துளி கூட சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன் ஓடும் பஸ்ஸில் வைத்தே வந்தனாவை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் பிரவீனை தடுக்க முயற்சிக்கும் போது, பயணிகளை நோக்கி அதே கத்தியை காட்டி பிரவீன் மிரட்டியுள்ளார். அதன் காரணமாக பயணிகள் அனைவரும் ஒதுங்கி நின்றனர்.

ஆத்திரம் தீராத பிரவீன் வந்தனாவை அவரது ஆத்திரம் தீரும்வரை குத்தி கொலை செய்தார். கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார். அதன் காரணமாக வந்தனா ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டாலர். அதன்பின் வந்தனாவின் உடலை பஸ்ஸிலிருந்து பிரவீன் கீழேயும் தள்ளிவிட்டார். மேலும் பஸ்சின் படிக்கட்டில் நின்று அவர் ஜாலியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதுபற்றி சங்கேஷ்வரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓடும் பஸ்சில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் வந்தனாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு பிரவீனை கைது செய்துள்ளனர்.