ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடூர நபர்! தனியாக போராடிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Photo of author

By Sakthi

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சற்றும் குறைந்தபாடில்லை.

நாட்டில் பல்வேறு இடங்களில், பல்வேறு பகுதிகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், தண்டனை இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகளை குற்றவாளிகள் அறிந்த பின்னரே குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த தவறு செய்து விட்டால் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது என்ற சூழ்நிலை உருவானால் மட்டுமே தவறுகள் குறையும்.

மேலும் தற்போது தண்டனை கிடைத்தாலும் கூட பரவாயில்லை தான் நினைத்தது நடந்தால் போதும் என்ற மனநிலையில் கூட சிலர் இருந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நபர்களுக்கு தண்டனை என்பது மிகக் கொடூரமாக இருக்க வேண்டும் என்பதே சாமானிய, சாதாரண, மக்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் இது ஜனநாயக நாடு இந்த ஜனநாயக நாட்டில் சில கொடூர தண்டனைகள் வழங்கப்படுவது குற்றமாக கருதப்படுகிறது. ஆகவே அரசாங்கம் ஜனநாயகம் என்று தெரிவித்து பல தண்டனைகளை வழங்காமலிருந்து வருகிறது.

ஆனால் இந்த ஜனநாயக போர்வையில் பல சமூக விரோதிகள் ஒளிந்துகொண்டு சமூக விரோத செயல்களை செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சென்ற சில வருடங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் தொல்லை, பாலியல் வன்கொடுமை, கொலை,என பலவிதத்தில் குற்றங்கள் நடந்து வருகின்றன.

இதற்கெல்லாம் மேலாக அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ஒருவரே பாலியல் வழக்கில் சிறைக்கு சென்றதும் நடந்திருக்கிறது.

அந்த வகையில் தற்போது நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது உத்தரப் பிரதேசத்தில் இருக்கின்ற பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் மத்திய பிரதேசத்திலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு தொடர்வண்டியில் வந்திருக்கிறார். மகோபாவுக்கு செல்லும் பயணிகள் ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி.

ஒரு தொடர்வண்டி நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஏறியிருக்கிறார் அந்த பெட்டியில் வேறு பயணிகள் யாருமில்லாத துணிச்சலில் இளம்பெண்ணை நெருங்கி தகாத வார்த்தைகளை அவர் பிரயோகம் செய்திருக்கிறார். அதன் பிறகு அவரிடம் அத்துமீற முயற்சி செய்திருக்கிறார்.

இதன் காரணமாக, பெரும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தப்பி ஓடிய போதும் துரத்தி, துரத்தி, பாலியல் தொல்லை வழங்கியிருக்கிறார். தொடர்வண்டி சென்று கொண்டிருந்ததால் அவர் அடுத்த பெட்டிக்குள் ஓடியபோதும் அங்கும் பயணிகள் யாருமில்லை என்ற காரணத்தால் அவருக்கு உதவி எதுவும் கிடைக்கவில்லை.

அந்த கொடூரன் கையில் சிக்கி போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண் அந்த கொடூர மனிதனின் கையில் கொடுத்திருக்கிறார். அதில் ரத்த காயமடைந்த அந்த நபர் ஆத்திரத்தின் மிகுதியில் இளம்பெண்ணின் வயிற்றிலும் முகத்திலும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதன் பிறகு அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட முயற்சி செய்திருக்கிறார. பெட்டியின் கதவு கைப்பிடியை பற்றி தொங்கியபடி அந்த பெண் உயிருக்கு போராடினார். அப்போது அவரின் கை மீது அந்த நபர் உதைத்ததால் கைகழுவி ராஜ் நகர் என்ற இடத்தில் ரயிலில் இருந்து வெளியே விழுந்தார் அந்த பெண்.

இந்த நிலையில், தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண் விழுந்து கிடந்த நிலையில் ரயில்வே ஊழியர்கள் அதனைக் கண்டு மருத்துவமனையில் அந்த பெண்ணை சேர்த்திருக்கிறார்கள். அதோடு ரயில்வே காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் வழக்கு பதிவு செய்தார்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளினடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகின்றன.

சிசிடிவி கேமராவில் குற்றவாளியின் உருவப்படம் பதிவாகியிருப்பதால் அதனடிப்படையில் மிக விரைவில் இந்த கொடூரத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.