விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் ஆடியோ வெளியீடு இந்த தேதியில் வெளியாக உள்ளதாக தகவல்!

0
126

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் ஆடியோ வெளியீடு இந்த தேதியில் வெளியாக உள்ளதாக தகவல்!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து, விஜய் நடிப்பில் உருவாகி விரைவில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், டப்பிங் பணிகளும் நிறைவடைந்து தற்போது பீஸ்ட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியானது. தினந்தோறும் பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்டு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் சமந்தா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாக தயாராக உள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இதையொட்டி தற்போது படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு படக்குழு தயாராகி வருகிறது.

வரும் 20ம் தேதி படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இசை வெளியீடு நேரு ஸ்டேடியம் அல்லது சாய் ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K