அரசு உழியரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்! அப்பகுதியில் பேருந்துகள் நிறுத்தம் மக்கள் அவதி!

Photo of author

By Parthipan K

அரசு உழியரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்! அப்பகுதியில் பேருந்துகள் நிறுத்தம் மக்கள் அவதி!

Parthipan K

Updated on:

The auto driver attacked the government worker! Bus stop in the area people suffer!

அரசு உழியரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்! அப்பகுதியில் பேருந்துகள் நிறுத்தம் மக்கள் அவதி!

காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கென மூன்று பழுதுபார்க்கும் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு நாள்தோறும் நுற்றுக்கணக்கான பேருந்துகள் அதிகாலை முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓரிக்கை பணிமனை இரண்டில்லிருந்து தாம்பரம் செல்லும் பேருந்தை ஓட்டுனர் சுரேஷ் மற்றும் நடத்துநர் உமாபதி ஆகிய இருவரும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பேருந்து நிலையத்திற்கு வெளியே தவறான எதிர்திசையில் பேருந்துக்கு முன்பாக ஆட்டோ ஓன்று பயணிகளை இறக்கி விட்டு கொண்டிருந்தது. இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர்க்கும்  பேருந்து ஓட்டுனர்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வாக்குவாதத்தில் ஓட்டுனர் சுரேஷ் என்பவரை ஆட்டோ ஓட்டுனர் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து பலமாக தாக்கியுள்ளார். அந்த தாக்குதலில் சுரேஷ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனையடுத்து அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி பேருந்து ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக போலீசார் பேருந்து ஓட்டுனர்களிடம் பேச்சவார்த்தை நடத்தி. மேலும் ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்படுவர் எனவும் உறுதியளித்தனர். அதன் பின்னர் அந்த போராட்டம் கைவிடப்பட்டது.