ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 80ஆயிரம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!
சென்னை இராயபுரம் பகுதியில் வசித்து வருபவர் மும்தாஜ் பேகம்
(67) இவர் தனது மகன் வீட்டிலிருந்து அதே பகுதியில் இரண்டு தெருக்கள் தள்ளி இருக்க கூடிய தனது மகள் வீட்டிற்கு பிரகாஷ் என்பவரின் ஆட்டோவில் சென்றுள்ளார்.
மகள் வீட்டிற்கு சென்றதும் தான் கையோடுகொண்டு வந்த பையில் இருந்த சுமார் 80 ஆயிரம் பணத்தை தவற விட்டது தெரியவந்துள்ளது.
உடனடியாக இது குறித்து இராயபுரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கவே புகாரை பெற்று கொண்ட ஆய்வாளர் அருள்செல்வன் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்து கொண்டிருந்த போது
ஆட்டோ ஓட்டுநரான பிரகாஷே காவல் நிலையத்திற்கு நேரில் வந்து பணத்தை ஒப்படைத்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டூம் விதமாக அவருக்கு இராயபுரம் உதவி ஆணையர் லட்சுமணன் மற்றும் ஆய்வாளர் அருள் செல்வன் ஆகியோர் சண்மானம் வழங்கி ஊக்குவித்தனர்.

