கொடைவள்ளல் விருதை பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்!

Photo of author

By Kowsalya

கொடைவள்ளல் விருதை பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்!

திருச்சியில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் அரவிந்த் என்பவருக்கு ரத்ததான கொடை வள்ளல் என்ற விருதை வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

நவல்பட்டு காவல் பயிற்சி நிலையத்தை முதன்மை காவலராக பணியாற்றி வந்துள்ளார் அரவிந்த். இவர் தொடர்ந்து சமூக சேவைகளை செய்து வந்துள்ளார். இவர் தனது 18 வயதில் இருந்து வருடத்திற்கு நான்கு முறை என மொத்தம் 56 முறை இரத்த தானம் செய்துள்ளார். மேலும் ரத்த தானம் செய்ய தன்னார்வலர்களை ஒன்று திரட்டி 500க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் செய்ய வழி வகுத்துள்ளார். மேலும் பல சமூக சேவைகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்.

அவரை ஊக்குவிக்கும் விதமாக தேசம் காப்போம் என்ற அறக்கட்டளை தொடர்ந்து இரத்த தானம் செய்வதால்

‘ ரத்ததான கொடை வள்ளல்’ என்ற விருது அறக்கட்டளை இடமிருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளி முதல்வர் முத்துக்கருப்பன் மற்றும் டிஎஸ்பி மனோகரன் ஆகியோர் மைதானத்தில் பயிற்சிக் காவலர்கள் முன்னிலையில் வழங்கி கௌரவித்துள்ளனர்.

இந்த விருது மற்ற காவலர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் தன்னார்வலர்கள் அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.