Breaking News

கறிக் குழம்பிற்கு நடந்த சண்டை!! தந்தைக்கு விழுந்த கத்திக் குத்து!!

The battle for the curry!! Father stabbed!!
கறிக் குழம்பிற்கு நடந்த சண்டை!! தந்தைக்கு விழுந்த கத்திக் குத்து!!
தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் கறிக் குழம்பிற்காக மகனுக்கும் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் தந்தைக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் மகனுக்கு வைத்துள்ள கறிக்குழம்பை தந்தை சாப்பிட்டுள்ளார். இதை கண்டு ஆத்திரமடைந்த மகன், தந்தையுடன் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளார். வாக்குவாதம் சண்டையாக மாறி சண்டை முற்றியதில் தந்தையை மகன் கத்தி எடுத்து குத்தியுள்ளார்.
மகன் கத்தி எடுத்து தந்தையின் முதுகில் குத்தியதில் பலத்த காயம் அடைந்த தந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கறிக்குழம்பிற்கு சண்டை ஏற்பட்டு அதில் கத்திக்குத்தும் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.