செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்கம் வாங்க வேண்டுமா? அப்படியென்றால் இதை செய்யுங்கள்

Photo of author

By Sakthi

டிஜிட்டல் தங்கம்

நேரடியாக ஒருவர் தங்கம் வாங்கும் போது செய்கூலி சேதாரம் ஜிஎஸ்டி என்று பல்வேறு செலவினங்கள் இருக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

சுத்தமான தங்கம் அல்லாமல் ஆபரண தங்கத்தை வாங்கும் போது தரம் தொடர்பான கேள்வியும், மீண்டும் கேட்கும் பொழுது கேள்விகளை எழுப்புகின்றன. ஆகவே நேரடியாக தங்கமாக அல்லாமல் டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைத்து தற்போது ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இணையதளத்தில் டிமேட் கணக்கு ஆரம்பித்து ஏராளமான நபர்கள் தங்கம் வாங்கி வருகிறார்கள். அதேபோன்று மாற்று முறையில் தங்கம் வாங்கும் திட்டம் தங்க பத்திரங்கள் எனப்படும். இதில் தங்கத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இல்லை செய்கூலி சேதாரம் கிடையாது.

தங்க கடன் பத்திரம்

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் பத்திரம் தான் தங்க கடன் பத்திரம் என்று சொல்லப்படுகிறது. அன்றைய விலையில் 1 கிராம் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ? அதே விலையில் இந்த தங்க கடன்பத்திரங்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகிறது.

முதலீட்டுக்காக தங்கம் வாங்குபவர்கள் நேரடி தங்கத்திற்கு பதிலாக தங்க கடன் பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற பத்திரங்களில் குறிப்பிடப்படுவது 24 கேரட் சுத்தமான தங்கம் ஆனால் இவற்றை வாங்குவது மற்றும் விற்பதில் சில விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நபர் குறைந்த பட்சம் ஒரு கிராமிலிருந்து 4 கிலோ வரையில் தங்க கடன் பத்திரங்களாக வாங்க முடியும். தங்கம் விற்பனைக்கு ஆவணமாக பத்திரமாக வழங்கப்படும் இதனை டிமேட் கணக்குகளிலும் வாங்கலாம்.

செய்கூலி சேதாரம் இல்லை

இந்த கணக்கு வைத்திறுப்பவர்களாக இருந்தால் பங்குதாரர்கள் மூலமாகவே இந்த நகைக்கடன் பாத்திரங்கள் வாங்க விண்ணப்பிக்க முடியும்.

இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் இணையதளம் மூலமாக பேமெண்ட் வசதிகளைக் கொண்டு பணம் செலுத்துபவர்களுக்கு கிராமிற்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் செய்கூலி சேதாரம் எதுவும் கிடையாது. ஆனாலும் இதனை நேரடியாக தங்கமாக வாங்க முடியாது.

இப்படி வாங்கப்படும் தங்க கடன் பத்திரம் முதிர்வடையும் காலம் 8 வருடங்கள், கடன் பத்திரத்தை வாங்கி 8 வருடங்கள் ஆன பிறகுதான் அந்த கடன் பத்திரத்தை கொடுத்து அன்றைய தேதியில் தங்கம் என்ன விலையில் விற்கப்படுகிறதோ அந்த விலையில் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என சொல்லப்படுகிறது.

வரி கிடையாது.

இந்த தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்வதில் பல நன்மைகள் இருக்கின்றன. 8 வருடங்கள் கழித்து முடிவடைந்த பிறகு கிடைக்கும் நீண்ட கால முதலீட்டு வருவாய்க்கு வழி இல்லை அதேசமயம் இந்த தங்க முதலீடு பத்திரத்தை வைத்திருக்கும் போது வருடத்திற்கு 2.5 சதவீதம் அளவிற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை வட்டி வழங்கப்படுகிறது.