PMK: பாமகவின் முழு நிலவு மாநாடானது இம்மாதம் 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு முன்பு கட்சிக்குள் பல குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டது. இதனால் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என பலரும் செய்வதறியாது குழம்பியுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்து பத்து தொகுதிகளில் ஒரு தொகுதியை விட்டு மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்தது. இதனால் கட்சி அதிகாரம் பறிபோனது.
இவையனைத்திற்கும் காரணம் அன்புமணி தான் அவர்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் என கட்சி நிர்வாகிகள் பலரும் கூறிவந்தனர். அதுமட்டுமின்றி யாரெல்லாம் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு கட்சி அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றும் கூறினர். இதனையெல்லாம் ராமதாஸ் மனதில் வைத்து தான் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
இவர் மீண்டும் பதவியிலிருந்தால் கட்டாயம் பாஜகவுடன் கைகோர்த்து விடுவார், இம்முறை அதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே அமித்ஷா சென்னை வருகை புரிவதற்கு முன் பதவியிலிருந்து நீக்கிவிட்டார். மேற்கொண்டு நடக்கப் போகும் முழு நிலவு மாநாட்டில் கட்டாயம் எந்த கட்சியுடன், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்கப் போகிறோம் பாஜக-வுடன் தங்களுக்கு இருக்கும் தொடர்பு என்ன?? என்பது குறித்து விரிவாக தெரிவிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆட்சியில் பங்கு தருவோம் என கூறிய விஜய்யுடன் கைகோர்க்க இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டுள்ளது. வரும் 11ஆம் தேதி இது குறித்து அறிவிப்பு மாநாட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.