மாநில அரசை குறை சொல்லி குடைச்சல் கொடுக்க தான் பாஜக உள்ளது! மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் காட்டம்!

0
164
The BJP is only there to blame the state government! Communist Party political committee member Kattam!
The BJP is only there to blame the state government! Communist Party political committee member Kattam!

மாநில அரசை குறை சொல்லி குடைச்சல் கொடுக்க தான் பாஜக உள்ளது! மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் காட்டம்!

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பி.வி. நகரில் உள்ள கண்டோமெண்ட் நிர்வாகத்தின் கீழ் உள்ள மயான இடத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க கோரி மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோருக்கு 1000 கடிதம் அனுப்பும் இயக்கத்தை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அரசியல் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழவந்தாங்கல் பி.வி. நகரில் ராணுவ கண்டோன்மெண்ட் நிர்வாகத்திற்கு சொந்தமான மயானம் 40 ஆண்டுகளாக வசதிகள் செய்ய முடியாமல் உள்ளது.

இந்த இடத்தை மாநில அரசுக்கும் மாநகராட்சிக்கும் ஒப்படைத்தால் மின் மயானமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோருக்கு கடிதம் எழுதும் போராட்டம் நடக்கிறது.செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி வைக்க பிரதமர் வந்தார். அது முடிந்து பல நாட்கள் ஆகிறது. தவறான தகவலை வைத்து பா.ஜ.க. செய்கிறது.பிரதமர் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் சம்பந்தப்பட்ட மாநில அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்.

நல்ல பாதுகாப்பு இருந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். பாதுகாப்பு குறை என்பது சரியான கருத்து அல்ல. மாநில அரசை குறை சொல்ல வேண்டும், குடைச்சல் தர வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. தலைவர் தவறான பிரச்சனையை எழுப்புகிறார்.ஆன்-லைன் சூதாட்டத்தில் ஈடுப்பட்டு பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து உள்ளனர்.

சட்டப்பூர்வமான நடவடிக்கை தேவை என்பதால் தான் மாநில அரசு ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆய்வு செய்து அறிக்கையில் மசோதா அனுப்பியது. ஆனால் ஒப்புதல் தந்து ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கு பதிலாக 6 மாதங்களாக கிடப்பில் போட்டதால் காலாவதியாகி மறுபடியும் ஆன்-லைன் சூதாட்டம் ஆரம்பித்து உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஆன்-லைன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுப்போம் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சொல்கிறார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மசோதாவில் கையெழுத்து போடாமல் வைத்து விட்டு காலாவதி ஆகி மீண்டும் ஆன்- லைன் சூதாட்டம் தொடங்கி விட்டது.

மாநில கவர்னர் செய்து சரியானதல்ல. கவர்னர் நியமிக்கப்பட்ட பதவி. மத்திய பா.ஜ.க. பிரதிநிதி போல் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பலர் தற்கொலை செய்தால் கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறினார்.

Previous articleதிரைப்பட பணியில் போலீசாரை தள்ளிவிட்டு அணையில் விழுந்து இரட்டை ஆயுள் குற்றவாளி! வலைவீசும் போலீஸ்!
Next articleரயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்த வங்கிக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம்