கண்ணாடி வழியில் அன்பை பரிமாறும் சிறுவன் மற்றும் திமிங்கிலம்!

0
126

திமிங்கலம் பூமியிலேயே மிகப்பெரிய பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. திமிங்கலத்தில் 75 வகைகள் உண்டு. இதில் ஒரு வகையான பெலுகா திமிங்கலம் அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகிறது.

அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்த பெலுகா திமிங்கலத்தை அங்கு வருபவர்கள் ஆச்சரியமாக ரசிப்பது வழக்கமாகும். அந்த வரிசையில் சிறுவன் ஒருவன் கண்ணாடிக்குள் இருந்த திமிங்கலத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

இதனைப் கவனித்த அச்சிறுவனின் தாய் அன்பை பரிமாற ஆலோசனை கூறியுள்ளார். எனவே சிறுவன் கண்ணாடி வழியாக ‘முத்தம்’ அளித்துள்ளான். நீர் வாழ் பிராணிகளில் ‘புத்திசாலியானதில் திமிங்கலமும்’ ஒன்று. எனவே, திமிங்கலம் அதன் அன்பை திருப்பி ‘முத்தமாக கண்ணாடி’ வழியாக கொடுத்து உள்ளது.

இதனை அங்கு உள்ளவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். இதனை சிறுவனின் வீட்டார் வீடியோவாக எடுத்து வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். “திமிங்கலத்தின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது”.

Previous articleதேர்தல் அறிக்கையை வெளியிடும் திமுக! சபாஷ் போட்ட எடப்பாடி பழனிச்சாமி!
Next articleஅதிரடி பதிலை தெரிவித்த திமுக! அதிர்ச்சியடைந்த விசிக அவசர ஆலோசனை!