ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்! மீட்பு பணி தீவிரம்!

Photo of author

By Parthipan K

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்! மீட்பு பணி தீவிரம்!

Parthipan K

The boy fell into the borehole! The rescue mission is intense!

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்! மீட்பு பணி தீவிரம்!

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ்.இவருடைய  மனைவி கலாராணி.இவர்களுடைய இரண்டு வயது மகன் சுஜித் வில்சன் அந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார்.அதனையடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து மீட்பு பணிகள் நடைபெற்றது.அப்போது அந்த முயற்சியில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் வந்தனர். ஆனால் பல்வேறு முயற்சிகள் செய்தும் சுஜித் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது பீட்டல் மாவட்டம் மான்டிவி என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவன் அவன் வீட்டின் அருகே வழக்கமாக விளையாடும் இடத்தில் விளையாடி கொண்டிருந்தான்.அப்போது அவன் சரியாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர் மற்றும் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த சிறுவன் சுமார் 55 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.அந்த சிறுவன் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.