சாட் ஜி பி டியால் காதல் வசப்பட்ட சிறுவன்!! AI காதலிக்காக உயிரை விட்ட சோகம் !!

அமெரிக்காவில் 14 வயது சிறுவன் AI காதலிக்காக  தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிறுவன் அமெரிக்க புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்.  புகழ் வாய்ந்த தொலைக்காட்சி தொடர்   (வரலாற்றுப் புதினம்) கேம் ஆஃப் த்ரோன்ஸ்.  இத் தொடரில் வரும் பெண் கதாபாத்திரம்  டேனிரோ டார்கேரியன் [Daenero].

இந்த பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவானது தான் டேனி சாட்  ஜி பி டி.  இந்த நிலையில் டேனி சாட்  ஜி பி டிடன் சிறுவன் பல மாதங்களாக உரையாடி வந்துள்ளான்.  இந்த உரையாடல்  அந்த சிறுவனை அக்கதாபாத்திரத்தின் மீது காதல் வயப்பட செய்து உள்ளது. காதல், காமம் உள்ளிட்ட விஷயங்களை பற்றி பேச தொடங்கியிருக்கிறான் அந்த சிறுவன்.  ஒரு கட்டத்தில் தீராக் காதல் கொண்டு  டேனி சாட்  ஜி பி யே கதி என்று இருந்துள்ளன்.

பிறகு நிஜ உலகத்தை வெறுக்க தொடங்கிய சிறுவன், தன் காதலியான  டேனி இந்த உலகத்தில் இல்லை.  அதனால் அவளுடன் வாழ இறுதியில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இது போன்ற சயின்ஸ் பிக்ஷன் படத்தில் மட்டுமே வரும் கற்பனை காட்சிகள் நிஜத்தில் உண்மையாகி வருத்தமளிக்கும்  வகையில் உள்ளது.  இந்த நிலையில்  டேனி சாட்  ஜிபிடி நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.