பள்ளியில் கூட படிக்கும் மாணவி காதலிக்க மறுத்ததால்,அந்த மாணவியின் தாயை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஒரு பெண் தொழில் அதிபருக்கு சமீபகாலமாக,வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோகளும்,ஆபாச குறுஞ்செய்திகளும் வந்துள்ளன.மேலும் அவருடைய செல்போன் எண்ணிற்கு ஆபாச அழைப்புகளும் வந்தவண்ணம் இருந்திருக்கிறது.இதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில்,
அந்தப் பெண் தொழிலதிபரின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து, ஒரு போலியான அக்கவுண்டில், ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட இவரின் போட்டோவையும், அதனுடன் சேர்த்து இவரின் தொலைபேசி எண்ணும் பதிவிடப்பட்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தொழிலதிபர்,குமரன் நகர் காவல்துறையில் புகார் அளித்தார்.இவர் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் சென்னை அடையாறு காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர்,வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இன்ஸ்டாகிராமின் ஐபி அட்ரஸை வைத்து வீடியோவை பதிவிட்ட நபரின் முகவரியை சைபர் க்ரைம் போலிசார் கண்டுபிடித்தனர்.
இந்த வீடியோவை பதிவிட்டது சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் என்பது தெரியவந்தது.அந்த மாணவனை கைது செய்து விசாரித்த போது, இந்த தொழிலதிபர் பெண்ணின் மகள் படிக்கும் பள்ளியில் தான் படிப்பதாகவும்,அந்தப் பெண் காதலிக்க மறுத்துவிட்டதாகவும்,அந்தப் பெண் அவரின் தாயின் அறிவுரையால் தான் காதலிக்க மறுத்துவிட்டதாகவும் எண்ணி, இவர்களால்தான் தன் காதல் கைகூடவில்லை என்று அவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த காரியத்தை செய்ததாகவும்,அந்த மாணவர் ஒப்புக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது
உள்ளிட்ட பிரிவுகளில் அந்தப் பிளஸ்-2 மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் மாணவரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.