Cinema: தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து துறைகளிலும் முன்னணி ஹீரோயினியாக வளம் வந்தவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் சோஹையிலுடன் திருமணம் நடைபெற்றது. சினிமா திரைப்பட வாய்ப்புகள் குறையவே இவர் திருமணம் செய்து கொண்டார். அதிலும் தனது தோழியின் கணவரை தான் இவர் மனம் முடித்தார்.
பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாததால், பல வெப் சீரீஸ் களிலும் நடித்து வருகிறார். ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது அம்மா மீது அவரது தம்பியின் மனைவி மும்பையில் உள்ள அம்பாலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், எனது கணவருடன் வாழ விடாமல் ஹன்சிகா மற்றும் அவரது அம்மா என்னை துன்புறுத்துவதாக அவரது தம்பி மனைவி நான்சி ஜேம்ஸ் கூறியுள்ளார். இது ரீதியான வழக்கானது நீதிமன்றத்தில் இன்று அமர்வுக்கு வந்தது.
அதில் ஹன்சிகா சார்பாக, முன்னதாகவே எனது தம்பிக்கும் தம்பி மனைவியான நான்சி ஜேம்ஸுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. மேற்கொண்டு எப்படி நாங்கள் துன்புறுத்த முடியும்?? என்று கேள்வி கேட்டு தம்பி மனைவி தங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது ரீதியாக விசாரணை செய்த நீதிபதிகள் இது குறித்து முறையான பதிலளிக்க வேண்டும் என்று மும்பை அம்பாலி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். அது மட்டுமின்றி ஹன்சிகாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடும் என்பதால் கூடிய விரைவிலேயே இந்த வழக்கை முடிக்க பார்ப்பார் என்றும் கூறுகின்றனர்.