கவுண்டமணியின் காரை இடித்த பேருந்து!! இவரைப் பார்த்த உடன் ஓட்டுநர் செய்த செயல்!!

Photo of author

By Gayathri

கவுண்டமணி செந்தில் இவர்களுடைய காம்போ தமிழ் சினிமா துறையை பொருத்தவரையில் இன்றளவும் மிகப்பெரிய உச்சத்தில் உள்ளது என்றே கூறலாம். இவர்களுடைய காமெடி என்று சொன்னாலே கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழம் காமெடிதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இதைத் தாண்டி இன்னும் பற்பல காட்சிகளை கூறிக் கொண்டே போகலாம்.

மேலும் இவர்களுக்கென தனித்துவமான ரசிகர் படை இன்றளவும் இருந்து வருகிறது.உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி, முறை மாமன் என சுந்தர். சி இயக்கிய பல திரைப்படங்களில் கவுண்டமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து காமெடி காட்சிகளில் அசத்தி இருப்பார். அப்படி ஒரு சூழலில், உனக்காக எல்லாம் உனக்காக படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த சம்பவம் பற்றி சுந்தர். சி சில கருத்துக்களை ரசிகர்களிடையே பகிர்ந்துள்ளார்.

உனக்காக எல்லாம் உனக்காக என நான் இயக்கிய திரைப்படத்தில் கவுண்டமணி செய்த காமெடி காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். கவுண்டமணி அண்ணன் அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ஒரு நாள் வந்த போது மிகவும் கோபமாக ஸ்பாட்டிற்கு வந்திருந்தார். அன்று அவர் வாங்கிய புதிய காரின் மீது பேருந்து மோதியுள்ளது. இதனால் கோபமடைந்த கவுண்டமணி அவர்கள் கீழே இறங்கி பேருந்தினுடைய ஓட்டுநரை கோபமாக பார்த்துள்ளார்.

அதுவரை பயத்துடன் இருந்த ஓட்டுநர், கவுண்டமணி அவர்களை பார்த்த உடனே சிரித்துக் கொண்டே, அண்ணே எப்படி இருக்கீங்க?’ என ட்ரைவர் கேட்டிருக்கிறார். ‘ஏன்யா வண்டிய இடிச்சே?’ என கவுண்டமணி கேட்டதும், ‘படத்துல வர்ற மாதிரியே கோபப்படுறீங்களே’ என அந்த ட்ரைவர் நகைச்சுவையாக கேட்டுள்ளார்.

மேலும் அதே நேரத்தில், பேருந்துனுடைய நடத்துனர் எட்டிப் பார்க்க, அவராவது தனக்கு ஆதரவாக இருப்பார் என கவுண்டமணி நினைத்துள்ளார். ஆனால், அவரும் ‘கவுண்டமணி அண்ணே, எப்படி இருக்கீங்க?. செந்தில் அண்ணன் கூட வரலையா?’ என கேட்டதும் கவுண்டமணி அதிகமாக டென்சன் ஆகிவிட்டார். இதை முடித்து விட்டு ஷூட்டிங் ஸ்பாட் வந்த கவுண்டமணி என்னிடம், ‘பாருப்பா. யாருமே சண்டைக்கு வரமாட்டேங்குறாங்க’ என நடந்த நிகழ்வினை விரிவாக கூறினார் என்று சுந்தர் சி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

இதே வசனம், உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் கவுண்டமணி மற்றும் கார்த்திக் ஆகியோர் அமர்ந்து உணவருந்தும் காட்சியில் சண்டை போட செங்கலை சோற்றில் போடுவார். அப்போது யாரும் சண்டைக்கு வராமல் போக, ‘டேய், சண்டைக்கு வாங்கடா’ என கவுண்டமணி வசனம் பேசி இருப்பார்” என சுந்தர். சி இந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்து இருக்கிறார்.