பென்குயின் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது, வெள்ளை நிறம் மற்றும் கருப்பு நிறத்தில், அழகாக அசைந்தாடி நடந்து வரும் ஒரு அழகிய பறவை தான். இது பெரும்பாலும் பனிப்பிரதேசங்களிலேயே அதிகமாக காணப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே விருப்பமான பறவை என்றும் கூறலாம்.
ஆவணப்படங்கள் எடுக்கும் ஒரு புகைப்பட ஆய்வாளர் ஒருவர், அண்டார்டிகா நாட்டில் உள்ள தெற்கு ஜார்ஜியா என்றழைக்கப்படும் கடல் பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தான் அவருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு புகைப்படம் சிக்கியுள்ளது. ஒரு பென்குயின் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக தோற்றம் அளித்துள்ளது.
இந்தப் பென்குயின் மிகவும் மனதை கவரும் வகையில் இருப்பதாகவும், பல நாடுகளுக்கு ஆவணப்படங்கள் எடுப்பதற்காக புகைப்படங்கள் எடுத்துள்ளேன், இப்பொழுது தான் முதல் முறையாய் இந்தவகைப் பென்குயினை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனைவரும் அறிந்த வெள்ளை மற்றும் கருப்பு நிறத்திலுள்ள, ‘என்பரர் பென்குயின்’ உடன் இந்த புதுவிதமான மஞ்சள் நிற பென்குயின் இணைந்திருந்தது. பென்குயின் வகைகளில் முதன்மையாக கருதப்படும் அல்பினோ வகை போல இதுவும் ஒரு வித வகையாக இருக்கக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் இந்த புதுவிதமான பெண் குயினை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இப்போது மிகவும் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கதாகும்.