நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்! நடந்தது என்ன?

Photo of author

By Rupa

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்! நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம் அனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பனியன் கம்பனி தொழிலதிபர் ஆனந்த்.தனது கம்பெனியில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 பேரை ஊருக்கு வழி அனுப்பி வைக்க தனது காரில் அவர்களை அழைத்து சென்றார்.அவ்வாறு அழைத்து செல்லும் வேளையில் கோவையை நோக்கி நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தார்.கார் கருமத்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்த போது அதன் முன் பக்கம் திடீரென்று தீ பிடித்து எரிய ஆரம்பித்துவிட்டது.இதை பார்த்ததும் காரினுள்ளே அமர்ந்திருந்தவர்கள் காரை விட்டு இறங்கியுள்ளனர். இவர்கள் உடனே இறக்கியதால் எந்த வித காயங்களுமின்றி உயிர் தப்பினர்.

இதனையடுத்து தீ வேகமாக பரவி கார் முழுவதும் எரிய தொடங்கியது.அதன் பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கார் முழுவதும் பற்றிய தீயை முழுமையாக அனைத்தனர்.காரின் மேல் பற்றிய தீயை அனைத்தும் கார் சாம்பலானது.தீ விபத்து காரணமாக சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது