நேற்று மருத்துவர் இன்று ஆசிரியரை தொடர்ந்து வழக்கறிஞர்!! திமுக ஆட்சியில் தொடரும் குற்றச் சம்பவங்கள்!!

Photo of author

By Sakthi

Krishnagiri:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அரிவாள் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன் கிண்டி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் பாலாஜி அங்குள்ள நோயாளியின் உறவினரால்  கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து. இன்று காலையில் தான் தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளியில்  நன்கு மாதங்களுக்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்த ரமணி. என்பவரை  திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் மதன்குமார் என்பவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் தமிழகத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நடந்த அதிரிச்சியில் இருந்து இன்னும் விடு படக்கூட வில்லை இந்த நிலையில் தான் மீண்டும் ஒரு கொலை குற்றம் கிருஷ்ணகிரி  மாவட்டம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி  மாவட்டம் ஓசூர் நீதிமன்றத்திற்கு  இன்று(நவம்பர்-20)பிற்பகல் நேரத்தில் வழக்கிற்காக  வந்து இருக்கிறார் வழக்கறிஞர் கண்ணன். இவர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் போது மர்ம நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வழக்கறிஞர் கண்ணன் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனால் பலத்த வெட்டு காயங்கள் அடைந்த வழக்கறிஞர் கண்ணன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக வழக்கறிஞர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வழக்கறிஞர் கண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

மேலும்  போலீசார் அந்த மர்ம நபர் பற்றியும், முன் விரோதம் காரணமாக? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.