கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்வது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

0
116

கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்வது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளி கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டை தவிர்த்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு,மூன்றாம் ஆண்டு, மாணவர்களுக்கும்,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்று உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.ஆனால் யுஜிசி அமைப்பானது,கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர்
தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளது.

இதை எதிர்த்து யுவனா மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து நீதிபதி அசோக் பிஷன் தலைமையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.

அந்த விசாரணையில் பல்கலைகழக மானியக் குழு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும்,மாணவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும், யுவனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம்மும் ஆஜரானார்.

அப்பொழுது யூஜிசி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்,யூஜிசி உத்தரவுகளை மீறி கல்லூரி தேர்வுகளை மாநில அரசுகள் ரத்து செய்ய முடியாது இறுதியாண்டு தேர்வு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை. செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று உறுதியாக உள்ளோமென்று யுஜிசி தரப்பில் வாதிடப்பட்டது.

மாணவர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்,தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது இந்நிலையில் மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகளை எப்படி நடத்த முடியும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகின்ற ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.மாணவர்களின் நலன் கருதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்குமென்று மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 

Previous articleகரீபியன் லீக் : டிம் செப்ர்டின் நிதான ஆட்டத்தால் வெற்றி பெற்ற நைட் ரைடர்ஸ் அணி
Next articleஇங்கிலாந்து – பாகிஸ்தான் முதல் 20 ஓவர் போட்டி இன்று ஆரம்பம்