ஆறு மாதங்களாக மூடப்பட்ட காவிரி பாலம் இன்று திறப்பு! மக்கள் பயமின்றி பயணம் செய்யலாம்!

0
330
#image_title

ஆறு மாதங்களாக மூடப்பட்ட காவிரி பாலம் இன்று திறப்பு! மக்கள் பயமின்றி பயணம் செய்யலாம்!

திருச்சி மாவட்டத்திற்கு முக்கிய அடையாளமாக விளங்கியது காவிரி பாலம். திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976 ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. பழமையான திருச்சி காவேரி பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் பலமுறை சீர் செய்யப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பாலத்தை விரிசல்கள் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து காவிரி பாலத்தினை சீரமைக்க ரூ.6 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி முதல் பாலம் மூடப்பட்டது. காவேரி பாலத்தில் இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அந்த பாலத்தின் வழியாக செல்ல கூடிய கார் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பைபாஸ் வழியாக ஸ்ரீ ரங்கம் பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டது. காவேரி பாலத்தில் ஆறு மாதங்கள் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. அதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காக பாலம் இன்று திறக்கப்பட்டது.

ரூ 6 லட்சத்து 84 கோடியில் சீரமைக்கப்பட்ட பாலத்தை அமைச்சர் கே என் நேரு இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் . அதனைத் தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் பயணித்து போக்குவரத்தை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇன்று முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!
Next articleதமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!