சுயமாக தொழில் தொடங்க ரூ.10 லட்சம் தரும் மத்திய அரசு!! எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை!!

Photo of author

By Rupa

சுயமாக தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற சிறப்பான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் மூலம் கோழிப்பண்ணை,பால் பண்ணை,தேனீ வளர்ப்பு உள்ளிட்ட சுயத் தொழில்களுக்கு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இதுவரை 49 கோடி பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.இதன் மூலம் ஏராளமான சிறு குறு தொழில் முனைவோர் உருவாகி இருக்கின்றனர்.இத்திட்டத்தின் மூலம் நபர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 5 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெற்றுள்ளனர்.எந்த ஒரு ஆவணமும் இன்றி கடன் வழங்கப்படுவதே இத்திட்டத்தின் சிறப்பு.புதிதாக தொழில் தொடங்க உள்ளவர்களுக்கு வங்கியில் கடன் பெற சில ஆவணங்கள் தேவைப்படும்.ஆனால் இந்த முத்ரா கடன் திட்டத்தில் கடன் பெற எந்தஒரு ஆவணமும் தேவைப்படாது.

முத்ரா கடன் வழங்கும் நிறுவனங்கள்:

1)பொதுத்துறை வங்கி

2)தனியார் வங்கி

3)அரசு கூட்டுறவு வங்கி

4)வங்கி சாரா நிதி நிறுவனம்

5)சிறு நிதி நிறுவனம்

6)மைக்ரோ நிதி நிறுவனம்

18 வயது நிரம்பிய இந்திய குடிமகன்கள் யாராக இருந்தாலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தது பயன்பெறலாம்.

முத்ரா கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்:

*அடையாளச் சான்று(பான் கார்டு,ஆதார் அட்டை,வாக்காளர் அட்டை)

*முகவரி சான்று(ஆதார் அட்டை,வாக்காளர் அட்டை,வங்கி அறிக்கை)

முத்ரா கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தங்களுக்கு அருகில் உள்ள வங்கியில் உரிய ஆவணங்களுடன் முத்ரா கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,00,000 முதல் அதிகபட்சம் ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது.