விபத்து குறைப்பு நடவடிக்கையாக மத்திய அரசு போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை பல மடங்காக அதிகரித்திருக்கிறது. இதனை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.
சென்னையில் நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் உயர்த்தப்பட்ட அபராதம் விதிக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் நேற்று முதலே ஆரம்பமானது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகளுடன் வாக்குவாதம் செய்யக்கூடாது என்று காவல்துறையினருக்கு ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
அதற்கேற்றவாறு காவல்துறையினரும் அபராதம் மிதிப்பதில் கவனமாக செயல்பட்டனர். சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் இடம் ஏற்கனவே 100 முதல் 300 ரூபாய் வரையில் அபராதம் வசிக்க வசூலிக்கப்பட்டது தற்போது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதேபோல காரில் சீட் பெல்ட் அணியாத வாகனம் ஓட்டிகளிடம் 1000 ரூபாய் போதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
அதிககனம் மற்றும் அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றி செல்தல் என்று பலவிதமான போக்குவரத்து விதிமுறைகளுக்கும் உயர்த்தப்பட்ட அபராத தொகை விதிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்ததாவது சில வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்தனர். இவர்களுக்கு அறிவுரை வழங்கி உயர்த்தப்பட்ட அபராத தொகையை விதித்தோம். சாலைகளில் 10% பேர் மட்டுமே தலைக்கவசம் அணியாமல் செல்கிறார்கள். இவர்களுக்கும் தலைக்கவசம் அணிந்தால் கட்டாயம் விபத்துக்கள் குறையும். அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் அல்ல. எல்லோரும் போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். ஆகவே விபத்துகளால் உண்டாகும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.