பாஜகவுடன் ரகசிய தொடர்பில் இருக்கும் முதல்வர்! உண்மையை உடைத்த முக்கிய புள்ளி!
கடந்த ஆறு மாதம் காலமாக பீகார் மாநில அரசியலில் முழு நேர வேலையாக பிரசாந்த் கிஷோர் இறங்கியுள்ளார். முக்கிய கட்சிகள் ஆட்சி அமைப்பதில் பி கே வின் பங்கு அதிகம். அவ்வாறு இருந்தவர் தற்பொழுது முழு நேர வேலையாகவே அரசியலில் இறங்கியுள்ளார். தனி கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறுகின்றனர். தற்பொழுது இவர் காங்கிரஸ் ராகுல் காந்தி போலவே பாதயாத்திரை தொடங்கியுள்ளார். சுமார் 3500 கிலோ மீட்டர் தூரம் நடை பயண மேற்கொண்டு வருகிறார்.
அவ்வாறு மேற்கொள்ளும் பொழுது இவர் தற்பொழுது பீகாரின் உள்ள ஆட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். பீகார் முதல்வராக இருக்கும் நிதீஷ் குமார், தற்பொழுது பாஜகவுடன் உள்ள கூட்டணியை முறித்து விட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பி கே அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். நிதீஷ் குமார் மக்களின் கண் துடைப்பிற்காக வேண்டுமானால் பாஜக கூட்டணியை முறித்திருக்கலாம். ஆனால் இவர் பாஜகவுடன் ரகசிய டீலிங்கில் தான் இருக்கிறார்.
இவர்களுக்கு இடையில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஆன ஹரிவன்ஸ் பாலமாக உள்ளதாகவும் தெரிவித்தார். ஆகையால் பொதுமக்கள் இவரை நம்ப வேண்டாம். அதேபோல நித்திஷ் குமாருக்கு ஏதேனும் பிரச்சனை உண்டாக நேர்ந்தால் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணியில் சேர தயங்க மாட்டார். இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இவர் கூறியதற்கு ஐக்கிய ஜனதா தளம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஒருபோதும் எனது கட்சி பாஜகவுடன் இணைய வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பி கே வாய்க்கு வந்ததெல்லாம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசிக் கொண்டிருக்கிறார் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கவே இவ்வாறு இவர் குற்றம் சாட்டியும், விமர்சித்தும் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.