குடிநீர் எடுக்க சென்ற குழந்தை! தேடி வரும்போது தாய் கண்ட நீல நிற உதடுகள்!
டிஜிட்டல் உலகம் என்கிறார்கள் ஆனால் காலப்போக்கில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் எக்கச்சக்கமாக வளர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. அளவுக்கு மீறி அனைவரும் பெண்களிடம் அத்துமீறுகின்றனர். பெண்களிடம் தான் அப்படி நடக்கின்றனர் என்றால் சிறு குழந்தைகள், வயதான பாட்டிகள் முதற்கொண்டு யாரையும் விட்டுவைப்பதில்லை.
பலர் பெண்கள் மீது தவறு சொல்கிறார்கள். பெண்களின் உடை சரியில்லை, நடை சரியில்லை என்று சிறு பிள்ளைகள் என்ன செய்தார்கள்? அவர்களையும் இந்த சமூகத்தில் யாரும் விட்டுவைப்பதில்லை. ஏதோ ஒரு மூலையில், உலகத்தில் ஏதோ ஒரு பெண்ணின் மீது வன்கொடுமை நடந்து கொண்டே தான் இருக்கிறது. யாராக இருந்தாலும் அவர்கள் வீட்டில் ஒரு பெண் போல நினைத்தால், இந்த தவறுகள் நடக்குமா?
இதை சட்டம் மட்டுமே திருத்த முடியும். கடுமையான தண்டனைகள் இல்லாத வரை இவர்களை எல்லாம் நாம் என்னதான் சொன்னாலும் திருத்த முடியாது. டெல்லியில் நங்கல் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஒரு குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை சுடுகாட்டிற்கு தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி வெகுநேரமாகியும் திரும்ப வராததால் சந்தேகப்பட்ட அவரது தாயார் அங்கு சென்று பார்த்தபோது, சிறுமி உயிரிழந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த மூன்று பேர் தண்ணீரை குளிர்விக்கும் சாதனத்தில் இருந்து மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்ததாக கூறிவிட்டனர். மேலும் அவர்கள் அந்த பெண்ணிடம் போலீசிடம் கூறினால், உடற்கூறு ஆய்வு செய்வார்கள். சிறுமியின் உடல் பாகங்களை திருடி விற்றுவிடுவார்கள், என்றும் உடலை அறுத்து விடுவார்கள் என்றும், அங்கிருந்த நபர்கள் அவர்களிடம் குறை கூறி அங்கேயே எரித்து விடலாம் என்று கூறியுள்ளனர். தாய், தந்தையும் சரி என்று கூறி உடலை தகனம் செய்து விட்டு வீட்டிற்கு வந்த பின் தாய்க்கு சந்தேகம் தோன்றியுள்ளது.
குழந்தையின் உதடுகள் நீலமாக இருக்கின்றதே, மணிக்கட்டில் காயம் இருந்தது, முழங்கை மற்றும் முழங்காலில் தீக்காயங்கள் இருந்தது. அது என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்ததால், திடீரென்று யோசிக்காமல் போலீசாரை அழைத்துக் கொண்டு அங்கு சென்றபோது பாதி உடல் எரிந்து விட்டது. அதன் பின் தண்ணீரை ஊற்றி அணைத்து அந்த சிறுமியின் மீதமுள்ள உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் மற்றும் அல்லாமல் ஊர் மக்கள் 200 பேர் சென்று போராட்டம் நடத்தினர். அதன் காரணமாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் 4 பேரையும் டெல்லி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியின் மரணத்திற்குக் காரணம் சுடுகாட்டின் பூசாரியான 45 வயது மதிக்கத்தக்க ராதேஷ்யாம் மற்றும் ஊழியர்களான சலீம், லக்ஷ்மி நாராயணன் மற்றும் குல்தீப் ஆகியோர்தான் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர் அதனைத் தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
அவர்களின் மீது இந்திய தண்டனை தடுப்புச் சட்டம் 302, 376, 506 மற்றும் போக்சோ சட்டம், பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு டெல்லி அரசின் சமூக நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் ஒடுக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும் ட்விட்டரில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளது. காவல்துறை நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் டெல்லி அரசு நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடும் என்றும் தெரிவித்துள்ளது. மீண்டும் ஒரு தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட செய்தி டெல்லி காங்கிரஸ் தலைவர் டெல்லியை மற்றொரு ஹத்ராஸாக மாற்றம் அரசு அனுமதிக்க கூடாது என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள் #Justice for cantt Girl என்ற # ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். மக்கள் இந்த ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.