கலெக்டர் பங்களாவே ரூ.7 லட்சம் தான்.. தனிநபருக்கு பேரம் பேசி விற்ற விபரீதம்!! கையும் களவுமாக சிக்கிய சார்பதிவாளர்!
ஒரு நிலத்தை பலருக்கும் பத்திரப்பதிவு செய்து ஆள் மாறாட்டம் போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. அவ்வாறு பொறம்போக்கு நிலத்தை ஒருவர் பலருக்கு விற்று வருவதும் காலகாலமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது அரசு நிலத்தையே ஒருவருக்கு விற்று உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் பத்திரப்பதிவு நடந்துள்ளதில் சில குளறுபடிகள் உள்ளது என்பதை சில அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.அந்த வகையில் அரசுக்கு சொந்தமான மாவட்ட ஆட்சியர் வசிக்கும் பங்களாவை தனியா இருக்கு ஏமாற்றி பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட கலெக்டர் பங்களாவை 7 லட்சம் வரை பேரம் பேசி விற்று தெரிய வந்துள்ளது.
இதனை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட பத்திர பதிவாளர் ரூபியா பேகம் சென்னையில் உள்ள பத்திரப்பதிவு துறை தலைவருக்கு இது குறித்து புகார் அளித்தார். உடனடியாக இவ்வாறு அரசு நிலத்தையே தனியாருக்கு பத்திரப்பதிவு செய்தது கொடுத்ததால் சார்பதிவாளர் கதிரவனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த நிலத்தை வாங்கிய நபர் மற்றும் எழுதிக் கொடுத்தவர் என இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இவ்வாறு அரசு நிலத்தை முறையற்ற பத்திரப்பதிவு செய்ததால் இது விரைவில் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். பல அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் இவ்வாறு அரசு பங்களாவையே தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்தது குறித்து அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை உண்ணாக்கியுள்ளது.