பரபரப்பாக  காரை விட்டு இறங்கிய கலெக்டர்! எதற்கு இந்த திடீர் ஆய்வு!

Photo of author

By Rupa

பரபரப்பாக  காரை விட்டு இறங்கிய கலெக்டர்! எதற்கு இந்த திடீர் ஆய்வு!
தமிழக அரசின் உத்தரவின்படி, இன்று (13.06.2022) தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.மாணவர்களோடு மாணவர்களாக அமர்ந்து வகுப்பில் நடத்திய பாடங்களையும் கவனித்தனர்.மேலும் பள்ளி வளாகம் போன்றவை சீரான கட்டமைப்புடன் உள்ளதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டனர்.அதே போல அரசு மேல்நிலைப்பள்ளியில் தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
அதுமட்டுமின்றி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், இன்று (13.06.2022) நடைபெற்ற உலக குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்து, விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.இதனின் முக்கிய நோக்கமே குழந்தை தொழிலாளரை ஒழிப்பது தான்.