நகைச்சுவை நடிகரின் உணவகத்திற்கு அதிரடி சோதனை! ஹோட்டல் உரிமையாளர் நேரில் ஆஜராக உத்தரவு!

Photo of author

By Parthipan K

நகைச்சுவை நடிகரின் உணவகத்திற்கு அதிரடி சோதனை! ஹோட்டல் உரிமையாளர் நேரில் ஆஜராக உத்தரவு!

Parthipan K

The comedian's hotel was raided! The hotel owner ordered to appear in person!

நகைச்சுவை நடிகரின் உணவகத்திற்கு அதிரடி சோதனை! ஹோட்டல் உரிமையாளர் நேரில் ஆஜராக உத்தரவு!

மதுரை தெப்பகுளம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பளிவேறு இடங்களில் பிரபல காமெடி நடிகர் சூரி மற்றும் அவருடைய சகோதரர் இணைந்து சொந்தமாக அம்மன் என்ற பெயரில் உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர்.இதே பெயரில் பல்வேறு கிளைகள் அண்மையில் தான் தொடங்கப்பட்டது.இருப்பினும் நடிகர் சூரியின் ஹோட்டல் என்பதால் கூட்டம் எப்பொழும் அலைமோதி கொண்டே இருக்கும்.இந்நிலையில் அம்மன் ஹோட்டல்க்கு தேவையான அரிசி ,மாவு,எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மொத்தமாக தான் வாங்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு ஆவணமின்றி பொருட்கள் வாங்கப்பட்டதாக புகார் எழுந்து வருகின்றது.இதனையடுத்து உணவகத்தின் தலைமையிடமான தெப்பக்குளம் கிளையில் நேற்று மாலை ஐந்து பேர் கொண்ட வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் முக்கிய ஆவணகள் சில கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் ஹோட்டலின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது .