“முன்னாள் திரைப்பட நடிகரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான ‘மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்( எம் ஜி ஆர் )’ ஆவார். இவர்தான் தமிழகத்தில் மூன்றாவது முதலமைச்சர். 1977 முதல் 1987 அவர் இறக்கும் வரை தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றினார். இவர் பிரபல முன்னணி நடிகராகவும் இருந்து வந்தவர்”. இந்நாளும் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் உயிரோடு இருக்கிறார் என்று நம்பும் மனிதர்களும் உண்டு. அந்த அளவு தன் நடிப்பு திறமையினாலும், ஆளுமையினாலும் செல்வந்தம் படைத்தவர்.
இவர் திரையுலகில் நட்சத்திரமாக ஜொலிக்கும் போது இவரிடம் எதிர்த்து நின்று,பேசவே திரையுலகமே அஞ்சும். அந்த வகையில் இந்த தொகுப்பு ஒரு உதாரணம். அவர் ஆரம்ப காலகட்டத்தில் “கண்ணதாசன் வரிகளில் பாடலை இயக்கி நடித்துள்ளார். கண்ணதாசன் மீது இவருக்கு ஏற்பட்ட மன சங்கடத்தால் இனிமேல் என் பாட்டுகளுக்கு வாலி தான் பாடல் வரிகள் எழுதுவார் என்று திரை உலகிற்கு கட்டளையிட்டார். இச்செய்தி அக்காலத்தில் தலைப்பு செய்தியாக பரவியது”.
” வாலி,எம் ஜி ஆர் மற்றும் சரோஜாதேவி நடித்து இருந்த படகோட்டி திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதினார். இந்த படத்திற்கு விஸ்வநாதன், ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசை அமைத்தனர். இந்த படத்தில் மொத்தமாக எட்டு பாடல்கள். அவற்றுள் ஏழு பாடல்களுக்கு வாலி ஏற்கனவே பாடல் வரிகளை எழுதி விட்டார்.
பாடல்களை எழுதி வந்த சூழ்நிலையில் வாலிக்கு கடுமையான காய்ச்சல் வந்தது. எனினும் அந்த எட்டாவது பாடலுக்கும் வாலி தான் இசையமைக்க வேண்டும் என்று எம்ஜிஆர் கண்டிப்பாக கூறிவிட்டார். இதைத்தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தார் இயக்குனர் டி. பிரகாஷ் ராவ். இவ்வளவுக்கும் அந்த பாடல் எம்ஜிஆர்கான பாடல் கூட கிடையாது.
அது அந்தப் பட வில்லன் நம்பியார் குடிபோதையில் தன் காதலியை நினைத்து உருகும் பாடல். எம்ஜிஆர் சொல்லிட்டார் என்பதற்காக அந்த இயக்குனரின் நிலைமையை புரிந்து கொண்டு, வாலி காய்ச்சலுடன் அந்த பாடலை எழுதியுள்ளார். இந்தப் படம் வெளியாகி இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது. வாலி காய்ச்சலுடன் எழுதிய பாடலானது ‘அழகு ஒரு ராகம், ஆசை ஒரு தாளம்’ என்பதே ஆகும். இந்தப் பாடலுக்கு இன்றளவும் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு”.