கறார் காட்டிய திமுக! இறங்கி வந்த காங்கிரஸ் கட்சி!

Photo of author

By Sakthi

திமுக கூட்டணியில் இருக்கின்ற அனைத்து கட்சிகளுக்கும் ஒவ்வொன்றாக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரையில் இந்தியன் முஸ்லிம் லீக் , மனிதநேய மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டிருக்கிறது அதேபோல காங்கிரஸ், சிபிஐஎம், தமிழக வாழ்வுரிமை கட்சி ,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், போன்ற கட்சிகளுடன் இதுவரையில் திமுக சார்பாக தேர்தல் தொகுதி பங்கீடு ஒரு முடிவுக்கு வரவில்லை .காங்கிரஸ் கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக பழுப்பறியில் தான் இருந்து வருகின்றது.

இந்த நிலையில், இன்று சென்னையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி நாற்பத்தி ஒரு தொகுதிகளை திமுகவிடம் கேட்டு வருகின்றது. ஆனால் அந்தக் கட்சிக்கு திமுக 20 முதல் 21 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறது. ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சியை சம்மதம் தெரிவிக்கவில்லை. அந்தக் கட்சியின் நிர்வாகிகள் 41 தொகுதிகள் தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து வந்தார்கள். இருந்தாலும் நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவர்கள் சற்று இறங்கி வந்து 27 தொகுதிகள் அதோடு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் திமுக தரப்பில் காங்கிரஸ் கட்சி கேட்ட 41 தொகுதிகளில் தருவதற்கு விரும்பவில்லை காரணம் அந்தக் கட்சிக்கு சென்ற முறை இரட்டை இலக்க தொகுதிகள் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அந்த கட்சி வெற்றி பெற்றது வெறும் 8 தொகுதி மட்டும் தான் .அதனை மனதில் வைத்து தான் திமுக காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ததில் கறார் காட்டி வருகிறது. ஒருபுறம் காங்கிரஸ் கட்சி தன்னுடைய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் மறுபுறம் அந்த கட்சியின் நிர்வாகிகள் கொடுத்தால் 41 தொகுதிகள் இல்லை என்றால் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று சுவரொட்டிகள் அடித்து விடும் அளவிற்கு தீவிரமாக இறங்கி விட்டார்கள். இதையெல்லாம் பார்த்த திமுக தலைமை சற்று அசந்து போய் தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ் .அழகிரி எங்களுடைய தன்மானத்திற்கு இழுக்கு வராத அளவிற்கு நாங்கள் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.