கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினர்!! போராட்டக்காரர்கள் மீது கான்கிரீட் கலவையைக் கொட்டிய ஒப்பந்ததாரர்!

Photo of author

By Savitha

கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினர்!! போராட்டக்காரர்கள் மீது கான்கிரீட் கலவையைக் கொட்டிய ஒப்பந்ததாரர்!

Savitha

கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினர்!! போராட்டக்காரர்கள் மீது கான்கிரீட் கலவையைக் கொட்டிய ஒப்பந்ததாரர்!

கரூர் மாநகராட்சி 16 வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் கட்டுமான பணி கடந்த சில பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில், ஜேசிபி எந்திரத்தை கொண்டு குழி தோண்டும்போது சம்பந்தப்பட்ட வீட்டின் பக்கவாட்டு சுவர் அடித்தளம் பெயர்ந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக வீடு வலுவிழந்ததால் உள் பக்கமாக மேற்கூறையை தாங்கி பிடிப்பதற்காக இரும்பு ஜாக்கிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்கவாட்டு சுவற்றில் கான்கிரீட் அமைக்க வீட்டு உரிமையாளரிடம் ஒப்பந்ததாரர் ரூபாய் 43,000 பணம் கேட்டதாக புகார் எழுந்தது.

பணத்தை கொடுக்காமல் கான்கிரீட் அமைக்க முடியாது என்று ஒப்பந்ததாரர் கூறிய நிலையில், வீட்டு உரிமையாளர்களான பாலசந்தர், கோமதி தம்பதிகள் இருவரும் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதை பொருட்படுத்தாமல் ஒப்பந்ததாரர் அவர்கள் மீது கான்கிரீட் சிமெண்ட் கலவையை கொட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.