இனி இந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும்! அது எந்த நாடு தெரியுமா?

0
113

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. 

தற்போது நம் நாட்டில், தடுப்பூசி முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை கடந்துள்ள நிலையில் இறுதிகட்ட பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது. 

தற்போது பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. ஃபைசர் – பயோன்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இவ்வாறான ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த நிறுவனங்கள் அந்நாட்டில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் இந்த மருந்து அடுத்த வாரம் முதல் மக்களுக்கு கிடைக்கும் படி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Previous articleரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து ‘ஸ்புட்னிக்-V’ இந்தியா வருகை! எதற்கு தெரியுமா?
Next articleஅழகிரி போட்ட அதிரடி திட்டம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!