கொரோனா தடுப்பூசி போட்டாலும் கொரோனா மீண்டும் வரும்! நடிகர் விவேக்கின் பேச்சு…

Photo of author

By Rupa

கொரோனா தடுப்பூசி போட்டாலும் கொரோனா மீண்டும் வரும்! நடிகர் விவேக்கின் பேச்சு…

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

அந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்கு பல வித கட்டுப்பாடுகளை போட்டனர்.மக்கள் கூட்டம் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே அனுமதிக்க வேண்டும்.திருவிழாக்கள்,மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை விதித்துள்ளது.உழவர்சந்தைகளில் சில்லறை வியாபாரிகளுக்கும் தடை விதித்தனர்.இருப்பினும் பல அரசியல்வாதிகள்,நடிகர்கள்,விளையாட்டு வீரர்கள் என பிரபலமடைந்த அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

அந்தவகையில் தற்சமையம் நகைச்சுவை நடிகர் செந்தில்க்கு கொரோனா தொற்றானது உறுதியானது.அதற்கடுத்து திமுக பொருளாளர் –க்கு கொரோனா தொற்றானது உறுதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்.அதற்கடுத்து நடிகை நக்குமா மற்றும் சூர்யா ஆகியோர்க்கும் கொரோனா தொற்றானது அதிக அளவு பாதிப்பை கொடுத்தது.அந்தவகையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி தமிழக அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.

இன்று நகைச்சுவை நடிகர் விவேக் தடுப்பூசி திருவிழாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து  கூறியது,மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர வேண்டும்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மீண்டும் கொரோனா தொற்று பரவக்கூடும்.ஆனால் உயிர் இழக்க நேரிடும் அபாயம் ஏற்படாது என்றார்.அதனால் மக்கள் அனைவரும் கட்டாயம் அரசு வலியுறுத்தும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அதன்பின் கட்டுப்பாட்டு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என கூறினர்.அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மிகவும் திறமையாக செயல்படுகிறார்கள் என்ற பாராட்டினர்.