இப்படியே போன நாடு சீக்கிரம் சுடுகாடு ஆகிடும்!! காற்றில் பறந்தது சுகாதாரத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்!! குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக உலாவிய பொதுமக்கள்!!!
கொரோனா வைரஸ் 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மதிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்தது. கொரோனா வைரஸ் 2 ஆம் அலை அதிகரித்து வரும் நிலையில். பல்வேறு மாநிலங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மீண்டும் தடை விதிகப்படுள்ளது, பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கபட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள மெரீனா கடற்கரையில் சனிக்கிழமையான நேற்று முக்காககவசம் அணியாமலும் மற்றும் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றாமலும் மக்கள் கூடம் அலை மோதியது. இதானால் கொரோனா வைரஸ் தீவிரமடையும் அபயம் உள்ளதாக சுகதரத்துறை திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது, நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் மக்கள் அனைவரையும் முககவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், தனிநபர் இடைவெளி பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு நடைவடிக்கைகளை மேற்கொள்ளும் படி சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மக்கள் மெரீனா கடற்கரைக்கு எந்த ஒரு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கூட்டம் கூட்டமாக வார விடுமுறை நாளைக் கொண்டாட வந்தது சுகாதாரத்துறைக்கு பெரும் அதிருப்தி ஏற்ப்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமையான இன்று, சென்னையில் உள்ள காசிமேடு மீன் சந்தையிலும் பொதுமக்கள் எந்த ஒரு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் மீன் வாங்க குவிந்துள்ளார்கள். இச்சம்பவம் சுகாதாரத்துறைக்கு மேலும் அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது.