வெற்றிகரமாக படபிடிப்புகளை முடித்த படக்குழு! அதுவும் விண்வெளியில் இருந்து பூமிக்கு!
சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு படப்பிடிப்பை நடத்த ரஷ்ய குழு ஒன்று தீர்மானித்தது. அதன்படி மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் தலைமையில் ரஷ்ய நடிகை யூலியா பெரிசில்ட் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு சென்றனர்.
தி சேலன்ஜ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரருக்கு உடல்நல குறைபாடு ஏற்படுகிறது. அந்த விண்வெளி வீரரை காப்பாற்ற விண்வெளிக்கு செல்லும் பெண் மருத்துவரின் கதை என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். கடந்த ஐந்தாம் தேதி சோயுஸ் எம்எஸ் -19 என்ற விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இவர்கள் பன்னிரண்டு நாட்கள் விண்வெளியில் தங்கி படப்பிடிப்புகளை நடத்தியுள்ளனர்.
இன்று படப்பிடிப்புகளை முடித்துவிட்டு அந்தக் குழு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி உள்ளனர். கஜகஸ்தானில் உள்ள நேரப்படி இன்று அதிகாலை 12.35 நிமிடங்களுக்கு அவர்கள் தரை இறங்கி உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். படக்குழுவினர் அனைவரும் பூமிக்கு திரும்பியுள்ள நிலையில் விண்வெளி வீரரான ஆண்டன் ஷ்காப்லெரோவ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.