ADMK BJP: தமிழகத்தில் கொங்கு பகுதிகளில் எடப்பாடிக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் அதே தாக்கம் மோடிக்கு இருக்குமா என்பதில் சந்தேகம் தான். அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் திருப்பூர் இறக்குமதியானது நன்கு அடிவாங்கியுள்ளது. மேலும் நேற்று மட்டும் சுங்கச்சாவடி கட்டணம் 395 ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு தங்கம், பெட்ரோல் டீசல் என அனைத்தையும் அடுக்கிக் கொண்டே போகலாம். இது ரீதியாக மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கொங்கு மண்டலத்தில் அதன் இழப்பீடு உச்சத்தை எட்டும்.
இந்நிலையில் அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி மீதும் அதிருப்தி உண்டாகும். இதனால் அந்த இடத்தை ஸ்கோர் செய்ய திமுக -வோ அல்லது மாற்றுக் கட்சி சார்ந்தவர்களோ முயல்வார்கள். இதனால் தன் பக்கம் இருந்த ஆதரவாளர்களை எடப்பாடி இழக்க நேரிடும். இதனை விரும்பாத எடப்பாடி பழனிச்சாமி, பாஜக உடனான உறவை முடித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி கூட்டணி அமைத்ததிலிருந்து எந்த ஒரு தெளிவும் இல்லாமல் குழப்ப நிலையில் தான் செல்கிறது.
ஒரு பக்கம் கூட்டணி முறையில் ஆட்சி மற்றொரு பக்கம் தனித்து ஆட்சி என மாறி மாறி கூறி வருகின்றனர். இதனால் கூட்டணியில் வெற்றி பெற்றாலும் சிக்கலில் தான் முடியும், மேலும் பெருமான்மையான மக்கள் பாஜகவை எதிர்ப்பதால் கூட்டணி வைத்தும் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம். இது ரீதியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.