ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை… இணையத்தில் வீடியோ வைரல்…
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் பிருபா ஆறு உள்ளது. இந்த பிருபா ஆற்றில் பலட்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜோதி(35 வயது) என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் பதுங்கி இருந்த முதலை ஒன்று ஜோதியை பார்த்து அருகில் வந்தது. பின்னர் அந்த முதலை ஜோதியை இழுத்து சென்றது.
பின்னர் ஜோதியை கடித்து கொன்ற முதலை ஜோதியின் உடலை ஆற்றிலேயே விட்டுச் சென்றது. குளித்துக் கொண்டிருக்கும் பெண்ணை முதலை இழுத்து செல்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதால் ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் நபர்கள் கவனமாக இருக்குமாறு ஜஜ்பூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ஆற்றில் குளிக்கச் சென்ற பெண்ணை முதலை இழுத்துச் சென்று கடித்து கொன்ற சம்பவம் பலட்பூர் கிராமத்தில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.