மூன்றாவது குழந்தையும் பெண் என்பதால் தந்தை செய்த கொடூர செயல்!

Photo of author

By Hasini

மூன்றாவது குழந்தையும் பெண் என்பதால் தந்தை செய்த கொடூர செயல்!

அந்த காலத்தில் ஆண் பிள்ளைகள் வேண்டும்  என்று கூறியதனால், பல பெண்களுக்கு கள்ளி பால் கொடுத்தே கொன்று விட்டனர். அதன் காரணமாகதான் தற்போது திருமணத்திற்கு முன்பு ஆண்கள் போடும் கண்டிசன்கள் எல்லாம் பெண்கள் வீட்டில் சொல்லி வருகின்றனர்.

அதே போல் தற்போது நிறைய பேர் அந்த தவறுக்கான தண்டனை பெற்று வருகிறார்கள். ஆனாலும் தற்போது கூட பெண் குழந்தை என கருவை கலைக்கும் நிகழ்வு நடக்கிறது போல தெரிகிறது.

விஜயாப்புரா அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த், ஒரு தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விஜயலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்த முறை தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று உறவினர்களிடம், அரவிந்த் கூறி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவியின் வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை பற்றி அறிய அவரை ஸ்கேன் சென்டருக்கு அரவிந்த் அழைத்து சென்று உள்ளார்.

அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது விஜயலட்சுமியின் வயிற்றில் வளருவது பெண் குழந்தை என்று தெரிய வந்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த், விஜயலட்சுமியிடம் வயிற்றில் வளரும் கருவை கலைத்து விடும்படி கூறியதாக தெரிகிறது.

ஆனால் இதற்கு விஜயலட்சுமி ஒத்துக்கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயலட்சுமி வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்கு 2 பேரை அரவிந்த் அழைத்து வந்து உள்ளார். அதன் பின் 3 பேரும் சேர்ந்து விஜயலட்சுமிக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய முயன்று உள்ளனர்.

இதற்கு விஜயலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தாலும், அவரின் வயிற்றை கத்தியால் கிழித்து கணவன் உட்பட 2 பேரும் சேர்ந்து கருவை கலைத்து உள்ளனர்.

இதனால் விஜயலட்சுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் உள்பட 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். உயிருக்கு போராடிய விஜயலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் விஜயாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரவிந்த் உள்பட 2  பேரையும் வலை வீசி தேடிவருகிறார்கள். வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்று கூறுவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் விஜயலட்சுமியின் வயிற்றில் இருந்த குழந்தையை பற்றி கூறிய ஸ்கேன் சென்டரிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.